எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை - அதிமுக கடந்து வந்த பாதை
All India Anna Dravida Munnetra Kazhagam Politicians List
எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை அதிமுக கடந்து வந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அதிமுக தோன்றிய வரலாறு
அண்ணா இறந்ததற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும், முதலமைச்சராகவும் மு.கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது அந்த கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியின் கணக்குகளை கேட்டதால் அவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் புதிய கட்சியை தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர்,அனாகாபுத்துார் இராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த “அதிமுக” என்ற புதிய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஒரு சாதாரண தொண்டன் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்து கொண்டதாக அறிவித்தார். அதன் பின் மேல்சபை உறுப்பினர் பதவியையும் வழங்கினார்.
எம்.ஜி.ஆர். பின்னர் அதிமுக என்பதை அஇஅதிமுக அதாவது'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர் வெற்றி
கட்சி தொடங்கிய ஒரு வருடங்கள் ஆன நிலையில் 1972 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது அஇஅதிமுக.
இதையடுத்து 1973-ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது களம் இறங்கியது.
இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன் பின் 1977 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்திய பொதுவுடமை கட்சி,
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் மற்றும் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அப்போதைய எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக.
இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.எதிர்த்து போட்டியிட்ட திமுக 234 தொகுதிகளில் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு எம்.ஜி.ஆர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாத எம்.ஜி.ஆர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஜெயலலிதாவின் எண்ட்ரீ
தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமசந்திரன் என்ற எம்.ஜி.ஆர் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி காலமானார்.
இதன் பின் கட்சியை வழி நடத்தப் போவது யார்? யார் அடுத்த தலைமை என்ற பேச்சு கட்சி விஸ்வரூபம் எடுத்தது.
அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி ,எம்.ஆர்.வீரப்பனின் ஆதரவுடன் முதலமைச்சராகவும் கட்சியை வழிநடத்தும் பொறுப்பையும் வகித்தார்.
இதற்கு அக்கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது 132 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட அஇஅதிமுகவில் இருந்து 33 பேர் ஜெயலலிதாவை ஆதரிக்க தொடங்கினர்.
மீதம் இருந்த 99 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும், ஜானகியை ஆதரித்தார்.
1988 ஆம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதை திமுக மற்றும் இந்திரா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களும்,ஜானகி தரப்பு உறுப்பினர்களுக்கும் மத்தியில் கலவரம் வெடிக்கவே சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜெயலலிதா மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள். இதன் பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஜானகி தரப்பு வெற்றி பெற்றது.
கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றிய ஜெயலலிதா
பின்னர் ஜானகி ஆட்சியைக் கலைக்க உத்தரவிட்டது மத்திய அரசு .இதன் பின் 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது.
அந்த தேர்தலில் 69.9% சதவீத வாக்குகள் பதிவாகின.இதன் பின்னர் பிரிந்து செயல்பட்ட அஇஅதிமுகவினர் ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கினர்.
இதன் பின்னார் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிது.
ஜெயலலிதா தலைமையில் 1991,2001,2011,2016 ஆகிய நான்கு முறை ஆட்சியை கைப்பற்றி ஆட்சி அமைத்தது அஇஅதிமுக.
ஜெயலலிதா மறைவு
அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராகவும்,தமிழக முதலமைச்சராகவும் இருந்து வந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு காலமானார்.
அவரின் மறைவை அடுத்து டிசம்பர் 6 அன்று அதிகாலை 1 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம்.
அதன் பின்னர் டிசம்பர் 29 ஆம் தேதி 2016 ஆண்டு அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்ந்தெடுத்தனர் அப்போதைய பொதுக்குழு உறுப்பினர்கள்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அஇஅதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அப்போதைய முதலமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தனது விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
அவரின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அடுத்த முதலமைச்சர் பதவியேற்கும் வரை அப்பதவியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்வார் என அறிவித்தார்.
ஓ.பி.எஸ் - சசிகலா மோதல்
பிப்ரவரி 7 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு செய்தியாளர்களை சந்தித்த அப்போதைய பொறுப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை அளித்ததாக திடுக்கிடும் தகவலை கூறி அஇஅதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பினார்.
இதை தொடர்ந்து அஇஅதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த வி.கே.சசிகலா அறிவித்தார்.
இதையடுத்து ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா என இரு அணிகளாக பிரிந்தனர்.ஓ.பி.அணியில் மதுசூதனன்,மஃபா பாண்டியராஜன்,பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர்.
ஓ.பி.எஸ் அணியில் உள்ள அத்தனை பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் வி.கே.சசிகலா.
கூவத்துாரில் முகாமிட்ட சசிகலா
சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்கள் அனைவரையும் கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைத்தார் .
தன்னிடம் போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார் சசிகலா. அப்போது அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து அமைதி காத்து வந்தார் ஆளுநர்.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வந்ததால் அவர் சிறை செல்ல காரணமாக அமைந்தது.
இதையடுத்து தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 124 பேர் பலத்துடன் ஆலேசானை கூட்டம் நடத்திய சசிகலா, எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராகவும்,முதலமைச்சராகவும் தேர்ந்தெடுத்தார்.
கூட்டத்தின் போது சசிகலா முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை நியமித்த போது காலில் விழுந்த காட்சிகள் தற்போது வரை பேசு பொருளாக இருந்து வருகிறது.
மீண்டும் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற 6 மாதங்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கினால் மட்டுமே இணைவேன் என்று நிபந்தனை விதித்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி அணியினர் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் , கட்சியில் இருந்தும் நீக்கியது.
இதையடுத்து மீண்டும் கட்சியில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும்,துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் , சசிகலா ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர்.
சசிகலா ஆதரவு MLA-க்கள் பதவி பறிப்பு
சசிகலாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இவர்களை விசாரித்து, பதவி நீக்கம் செய்யும் படி சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார்.
இதை தொடர்ந்து அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பறித்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 18 உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்தனர்.ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
காலியான சட்டமன்ற தொகுதிகள்
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் காலமானதை அடுத்து தமிழகத்தில் 22 தொகுதிகள் வெற்றிடமாக இருந்து வந்தது.
பின்னர் 2019 மே மாதம் பாராளுமன்ற தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கு போட்டியாக அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியை தொடங்கிய டிடிவி.தினகரன் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினார்.
12 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்தது. இவர்களை எதிர்த்து போட்டியிட்ட அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.
2021 சட்டமன்ற தேர்தல்
இதன் பின் 2021 ஆம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது.இதில் அதிமுக 66 இடங்களை கைப்பற்றியது.பிரதான கட்சியான திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
66 வேட்பாளர்களை கொண்ட அதிமுக தமிழக சட்டமன்றத்தின் பிரதான எதிர்கட்சியாக அமர்ந்தது. இதில் அஇஅதிமுகவின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும்,எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் அங்கம் வகித்து வருகின்றனர்.
ஒற்றை தலைமை விவகாரம்
இந்த நிலையில் அதிமுக தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் ஜுன் 23 ஆம் தேதி நடத்தப்படும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடிக்கவே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்
பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு விற்கு எவ்வித தடையும் இல்லை எனக் கூறி உத்தரவிட்டார்.
இதையடுத்து மேல்முறையீடு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இதை அவசர வழக்காக அதிகாலை ஒரு மணியில் இருந்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
பிறகு காலை 4 மணிக்கு பொதுக்குழு நடத்த அனுமதி வழக்கப்படுகிறது.ஆனால் 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.
இதை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜுன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது.
அப்போது மேடை ஏறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தீர்மானங்கள் நிராகரிப்பு
பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக உள்ள தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அவைத்தலைவராக நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு வருகிற ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.
இதன் பின் பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளராக வைத்தியலிங்கம்.
மேடையில் இருந்து இறங்கும் போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னால் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சார்ந்த வைத்தியலிங்கம் இந்த பொதுக்குழு செல்லாது என கூறினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு
இந்த நிலையில் பெரும்பாலான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவருக்கு ஆதரவு என்பது அதிகரித்துள்ளது.
குறைவான அளவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது.
காலவதியான ஒருங்கிணைப்பாளர்,துணை ஒருங்கிணைப்பாளர் பதவி
அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவிகள கலாவதியாகிவிட்டதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அடுத்த தலைமை யார்?
அதிமுகவினர் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து அடுத்த பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையடுத்து வரும் ஜுலை 11 ஆம் தேதி நடக்க கூடிய பொதுக்குழு கூட்டத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேரந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள அண்ணா.. நீங்கள் ஒருங்கிணைப்பாளரே கிடையாது : ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் கடிதம்