அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - பெருகும் ஆதரவு..!
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இறுதி ஆலோசனை நடைபெற்றது.
ஆதரவு
இதனிடையே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ள நிலையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும்,
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 64 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல்
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் குவிந்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உடன் வந்த மாரிமுத்து என்பவர் மீது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி தான் பிடிப்பார் என்று ஒரு தரப்பும், இல்லை எங்கள் ஓ.பி.எஸ் தான் பிடிப்பார் என்று ஒரு தரப்பும் கூறி போஸ்டர் ஒட்டி வருவதால் கீரின்வேஸ் சாலை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.