சசிகலாவின் ஒற்றை தலைமையை ஏற்போம் : புதிய போஸ்டரால் பரபரப்பு
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து உதவுவதாக அறிவித்த சசிகலா கடந்த சில வாரங்களாக தொண்டர்களிடையே பேசும் ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள புதிய போஸ்டர் அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், “தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஒற்றை தலைமையை ஏற்று களப்பணி ஆற்றுவோம் சின்னம்மா தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் ராமநாதபுரம் அஇஅதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.