கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நின்ற தேர்தல்களிலெல்லாம் வென்றவர் கலைஞர் கருணாநிதி.
5 முறை முதல்வராக பொறுப்பேற்று 19 ஆண்டுகள் பதிவி வகித்தவர் கலைஞர் கருணாநிதி. மகளிருக்கும் சொத்துக்களில் உரிமை,உழவர்களுக்கு இலவச மின்சாரம்,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்தவர் கருணாநிதி.
கைம்பெண் மறுமண நிதி உதவி,மகளிர் சுய உதவிக்குழுக்கள்,பெரியார் சமத்துவப்புரம் திட்டம் தந்தவர் கருணாநிதி.
வி.பி.சிங்,குஜ்ரால்,வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரதமர்களால் பாராட்டப்பட்டவர் கலைஞர்.
கருணாநிதி பிறந்த ஜுன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
ஜுன் 3 அன்று சென்னை ஓமந்துாரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்.