பாண்டியாவுக்கு பயமே கிடையாது வெற்றிக்கு இவர் தான் காரணம் - ரோஹித் சர்மா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு வழிவகுத்த பாண்டியாவை ரோஹித் சர்மா வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்களும், இஃப்திகார் அஹமத் 28 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதிரடி காட்டிய பாண்டியா
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் களம் இறங்கிய கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் விராட் கோலி 35 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா - ரவீந்திர ஜடேஜா கூட்டணி 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த இந்திய அணிக்கு 19-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகள் அடித்தார் கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 19.4 ஓவர் முடிவில் 148 ரன்களை எடுத்து கொடுத்தார்.
பயமே கிடையாது - ரோஹித் பெருமிதம்
இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா, காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் தனித்துவமாக உள்ளது. அவரின் பேட்டிங்கும் மிகவும் சிறப்பாக உள்ளது.
பதற்றமான சூழலிலும் மிக நிதானமாக விளையாடுகிறார். அவர் பந்துவீச்சு, பேட்டிங் எதுவாக இருந்தாலும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார்.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ஹர்திக் பாண்டியா முகத்தில் பயம் தெரியவில்லை. ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணி கூடுதல் பலத்தை பெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
தினேஷ் கார்த்திக் வேண்டாம்! அவரை சேர்க்கலாம்.. ஆசிய கோப்பையில் தமிழனை புறக்கணித்த வீரர்