அடுத்த கேப்டன் ரோஹித் இல்லை.. இந்திய அணியின் புது கேப்டன் இவர் தான்...!
நியூசிலாந்து அணியுடனான டி20 தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, சமீபத்தில் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்தார். இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அதனை தொடர்ந்து இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெளியேறும் பட்சத்தில் கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது.
இதனையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த டி20 தொடருக்கான தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய கேப்டன் செயல்படுவார் என்று தெரிகிறது.
அந்த பதவிக்கு ரோஹித் சர்மா பெயர் அடிபட்டுள்ள நிலையில் நியூசிலாந்து டி20 தொடருக்கான புதிய கேப்டனை இன்னும் சில வாரங்களில் பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொடருக்கு நிச்சயம் ரோஹித் சர்மா கேப்டன் பதவியை ஏற்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் ரோஹித் சர்மா, கோலி, பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு அந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட அணி அந்த தொடரில் விளையாடவுள்ளது. எனவே அந்த அணிக்கு கேஎல் ராகுல் தலைமை தாங்குவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.