சோதனையை சாதனையாக்கிய ஹர்திக் பாண்டியா - நீ வரலாறு படைத்து விட்டாய் என க்ருணால் பாண்டியா நெகிழ்ச்சி..!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஆண்டின் சாம்பியன் பட்டம் வென்றது.
அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் அவரது அண்ணனும், ஆல்-ரவுண்டருமான குருணல் பாண்டியா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆடினார்.
அவர் ஹர்திக் பாண்டியாவை பாராட்டி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'சகோதரா..... உன்னால் சாதிக்க முடியாது என்று நிறைய பேர் விமர்சித்தனர். ஆனால் நீ வரலாறு படைத்து இருக்கிறாய்.
லட்சக்கணக்கான ரசிகர்கள் உனது பெயரை உச்சரித்து உற்சாகப்படுத்தியதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த வெற்றிக்கு பின்னால் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்பது உனக்கு மட்டுமே தெரியும். இந்த வெற்றிக்கு நீ தகுதியானவன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
My bro ? Only you know the amount of hard work that’s gone behind this success of yours - early mornings, countless hours of training, discipline and mental strength. And to see you lift the trophy is the fruits of your hard work ❤️ You deserve it all and so much more ?? pic.twitter.com/qpLrxmjkZz
— Krunal Pandya (@krunalpandya24) May 31, 2022