நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்து - இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!

Pakistan Qatar India Iran
By Thahir Jun 06, 2022 06:23 AM GMT
Report

நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்த பாஜக நிர்வாகிகளால் இந்தியாவுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை பேச்சு

நபிகள் நாயகம் குறித்து நவீன் குமார் ஜிண்டால் மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்தனர்.

நபிகள் நாயகம் பற்றி இழிவான கருத்து - இந்தியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..! | World Nations Condemn India

இதையடுதது பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாரதி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா அண்மையில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.

அப்போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை கூறினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் கிளம்பியது.

அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.

இந்நிலையில் இவர்களின் கருத்துக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார்,துபாய்,மற்றும் ஈரானிய துாதர்களை நேரில் அழைத்த அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான்

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து அந்நாட்டு அரசு அதிகாரிகளை சந்தித்த ​​இந்திய தூதர் "வருத்தம் தெரிவித்ததோடு, நபிகள் நாயகத்திற்கு எதிரான எந்தவொரு அவமதிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,

இந்தியா அனைத்து மதங்களுக்கு மரியாதை கொடுக்கும் என்றும் இது அரசின் நிலைபாடு இல்லை. ஜிண்டால் அரசாங்கத்தில் எந்தப் பதவியும் இல்லை என்றும்,

அந்தக் கருத்துக்களைக் கூறியதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் இந்தியத் தூதர் கூறினார். அடுத்த வாரம் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கத்தார்

நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தார். இந்திய துாதரை நேரில் வரவைழைத்து கண்டம் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு,

உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதாக தெரிவித்தது கண்டனங்களை பதிவு செய்தது.

குவைத்

இந்தியாவுக்கான துாதர் சிபி ஜார்ஜை வரவழைத்து கண்டனங்களை பதிவு செய்துள்ளது. நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி மக்களை துாண்டிவிடுவதாக குற்றம்சாட்டினார்.இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றுள்ளனர்.

பாகிஸ்தான்

இந்த கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்

"நமது அன்பிற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) பற்றி இந்தியாவின் பாஜக தலைவர் புண்படுத்தும் கருத்துக்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

மோடியின் கீழ் இந்தியா மதச் சுதந்திரத்தை மிதித்து, முஸ்லிம்களை துன்புறுத்துகிறது என்று பலமுறை கூறி வருகிறேன். உலகம் இந்தியாவைக் கவனிக்க வேண்டும் மற்றும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

எங்கள் அன்பு. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக உயர்ந்தவர். அனைத்து முஸ்லிம்களும் தங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அன்பு மற்றும் மரியாதைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


 தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் உயிரிழப்பு..!