ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்கிறது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை : 2011ல் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தி இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அமைதியாக இருந்த திமுக அமைதியாக இருந்தது என கூறிய அண்ணாமலை .
இந்தி திணிப்பை எந்த காரணம் கொண்டும் தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது என்றும் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்கிறது. ஆனால் அதை வளர்க்க என்ன செய்கிறோம் என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் இந்தி பேச மாட்டேன் இந்தியை கட்டாயம் திணிக்க மாட்டோம்.
பாஜக அதை செய்யாது. அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியும் அதை விரும்பவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு எத்தனை மாநிலத்தில் ஆட்சியை கலைத்தது என்று முதல்வர் ? சொல்ல வேண்டும் ?. பெட்ரோல் விலை உயர்வு குறித்து முதல்வர் செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். ஒ
ரு லிட்டர் டீசல் விலை ரூ.100.94 என தமிழகத்தில் உள்ளது. அதில் 18.31 மாநில அரசுக்கு வருவாய் வருகிறது. ஏன் தமிழக அரசு வாட் வரியை குறைக்கவில்லை ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.