தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் உயிரிழப்பு..!
நைஜீரியாவில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.
தேவாலயத்தில் துப்பாகிச் சூடு
நைஜீரியாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு வழக்கம் போல் நேற்று ஞாயிற்று கிழமை சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று இருந்தனர். அப்போது திடீரென தேவாலயத்தின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 50 பேர் உயிரழந்துள்ளனர்.
கண்டனம்
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒண்டோ மாநில ஆளுநர் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தாக்குதல் நடந்த இடத்தையும்,காயமடைந்தவர்களையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர்.
தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்தார்.
இடிபாடுகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் எலிகள் : புதிய ஆராய்ச்சியில் ஒரு விஞ்ஞானி