இஸ்லாமிய தலங்களை குறிவைக்கும் இந்து அமைப்புகள் - அஜ்மீர் தர்கா இந்து ஆலயம் என முதலமைச்சருக்கு கடிதம்..!

Rajasthan
By Thahir May 27, 2022 03:55 PM GMT
Report

புகழ் பெற்ற அஜ்மீர் தர்கா இந்து ஆலயம் என்பதால் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்பு ஒன்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி,டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் உள்ளிட்ட இஸ்லாமிய வழிப்பாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் இந்து ஆலயமாக இருந்தது என இந்து அமைப்புகள் கூறி வரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்லாமிய தலங்களை குறிவைக்கும் இந்து அமைப்புகள் - அஜ்மீர் தர்கா இந்து ஆலயம் என முதலமைச்சருக்கு கடிதம்..! | Letter To The Cm As Ajmer Dargah Hindu Temple

இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்கா உள்ளது.இந்த தர்கா இந்து ஆலயம் என மஹாரான பிரதாப் சேனா அமைப்பு தர்காவில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

அஜ்மீர் தர்காவில் உள்ள ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் இந்துக்களின் ஸ்வஸ்தி குறியீடு இருப்பதாகவும் கூறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு தர்கா நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.அவர்கள் கூறுவது போல் எந்த ஸ்வஸ்தி குறியீடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.