கணவனை தோளில் சுமந்து ஊர் முழுக்க வலம்.. தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Sexual harassment India Madhya Pradesh
1 மாதம் முன்

வேறொரு ஆண்டன் தொடர்பில் இருந்ததால் பெண் தனது கணவனை தோளில் சுமந்து ஊர் முழுவதும் சுற்றி வரவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 தகாத உறவு

மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தை சேர்ந்த நபர் மங்கிலால். இவரது மனைவிக்கும் அதேகிராமத்தை சேர்ந்த வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

madhya pradesh

இந்த நிலையில், மங்கிலால் தனது மனைவி உறவினர்களுடன் சேர்ந்து நேற்று முன் தினம் கடுமையாக தாக்கியுள்ளார். அந்த பெண்ணை கடுமையாக தாக்கி, உடைகளை கலைந்து மானபங்கம் படுத்தியுள்ளனர்.

ஊர் முழுவதும் வலம்

பின்னர், அந்த பெண்ணை அவரது கணவரான மங்கிலாலை தோளில் சுமக்க வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரை தோளில் சுமந்தபடி ஊர் முழுவதும் சுற்றவைத்துள்ளனர்.

கணவனை தோளில் சுமந்து ஊர் முழுக்க வலம்.. தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! | Woman Paraded With Spouse On Shoulders

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டது. இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவன் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மோடியின் தாடியை தவிர நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்ல - கே.பாலகிருஷ்ணன் ஆதங்கம்!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.