5 வயது மகளுக்கு செல்போன் வாங்கியதை கொண்டாடிய டீக்கடைக்காரர்

madhyapradesh smartphone celebration
By Petchi Avudaiappan Dec 22, 2021 06:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மத்தியபிரதேசத்தில்  5 வயது மகளுக்கு செல்போன் வாங்கியதை டீக்கடைக்காரர் கொண்டாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முராரி குஷ்வாஹா என்ற டீக்கடைக்காரருக்கு 5 வயது மகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளது. முராரி, அவரது மனைவி உட்பட குடும்பத்தினர் யாரிடமும் செல்போன் கிடையாது.

இதனிடையெ தனக்கு செல்போன் வேண்டும் என முராரியின் 5 வயது மகள் நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். ஆனால் நிதி நிலைமையை கருதி செல்போன் வாங்காமலேயே முராரி காலம் கடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில், தனது சேமிப்பை கொண்டு தனது மகளின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன் செல்போன் ஒன்றை வாங்கினார். 12,500 ரூபாய் மதிப்பிலான செல்போன் வாங்கி கொடுத்ததை அவர் பிரமாண்டமாக கொண்டாட விரும்பினார். 

இதற்காக முராரி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியை வாடகைக்கு எடுத்து அதில் தனது மகள் உள்பட 3 குழந்தைகளையும் அமர வைத்தார். அந்த குதிரை வண்டிக்கு முன்னே இசைக்கலைஞர்களை கொண்டு  மேளதாளங்களை இசைக்க  புதிதாக வாங்கிய செல்போனை தனது மகளின் கையில் கொடுத்து செல்போன் வாங்கிய கடையில் இருந்து தனது வீடு வரை முராரி அழைத்து வந்தார்.

இந்த கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.