மோடியின் தாடியை தவிர நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்ல - கே.பாலகிருஷ்ணன் ஆதங்கம்!

Communist Party Amit Shah Narendra Modi India
By Sumathi Jul 05, 2022 03:19 AM GMT
Report

பிரதமர் மோடிக்கு தாடி வளர்கிறதே தவிர நாட்டில் எதும் வளர்ச்சி அடையவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

நகர செயலாளர் காத்தமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தாமஸ், முத்துக்குமார், முருகன் மாவட்ட குழு பூங்கோதை,

k balakrishnan

அன்புச்செல்வன், ஜெயபாரத் ஒன்றிய செயலாளர் கணேசன் காரியாபட்டி தாலுகா செயலாளர் அம்மாசி திருச்சுழி தாலுகா செயலாளர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 அமித்ஷா

இதில் பேசிய கே.பாலகிருஷ்ணன், பாஜக கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டத்தை கூட்டுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் ஆட்சி அமைப்பதே அடுத்த எங்கள் அடுத்த இலக்கு என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார்.

amitsha

மகாராஷ்டிரா மற்றும் பாண்டிச்சேரி போல் தமிழகம் கேரளாவில் எம்எல்ஏகளை விலைக்கு வாங்கி பிஜேபி ஆட்சி அமைக்க முடியாது. இது வேறு பாரம்பரியம்.

வளர்ச்சி இல்லை

அமித்சாவின் பேச்சை கேட்டு அண்ணாமலை ஆடிக்கொண்டிருக்கிறார்.மோடிக்கு தாடி மட்டும் தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேறு எந்த வளர்ச்சியும் இல்லை.

விருதுநகர் மாவட்டதில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் அச்சுத்தொழில் பட்டாசு தொழில் நெசுவுத்தொழில் அழிந்து வருகிறது. மத்திய பாஜக அரசு சிறு குறு தொழில்களை அழித்து கார்ப்பரேட்டை வளர்த்து வருகிறது என்று தெரிவித்தார்.

4 லட்சம் கட்சி நிதி

முன்னதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அரசியல் விளக்கம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நகர் மற்றும் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூபாய் 4 லட்சம் கட்சி நிதியாக மாநிலக்குழு செயலாளர் பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. 

மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!