ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி

Edappadi K. Palaniswami
By Thahir Jun 06, 2022 11:07 AM GMT
Report

உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண் உயிரிழப்பு

சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியரான பவானிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் இவர் பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த நிலையில் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி தன்னிடம் இருந்த 20 சவரன் நகையை விற்றும், சகோதரியிடம் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியும் ரம்மி விளையாடியுள்ளார்.

இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் கடன் வாங்கிய 30 லட்சம் ரூபாயை திருப்பி அடைக்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஆளான பவானி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

எடப்பாடி பழனிசாமி கேள்வி

இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,

தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.காவல்துறை டிஜிபி-யே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம், என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட,

இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்?

இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.   

ஆன்லைன் ரம்மிக்கு தடைபோட்ட தமிழக அரசு .. தடைய ரத்து செய்த ஐகோர்ட்!