ஆன்லைன் ரம்மிக்கு தடைபோட்ட தமிழக அரசு .. தடைய ரத்து செய்த ஐகோர்ட்!

highcourt cancel onlinerummy
By Irumporai Aug 03, 2021 10:03 AM GMT
Report

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன.

   இந்த வழக்கானது கடந்த ஜூலை 26 ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஆன்லைன் நிறுவனங்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் ஆன்லைன் விளையாட்டில் திறமை அடங்கி இருப்பதாகவும், சூதாட்டம் இல்லை என வாதிட்டனர்.

அதே சமயம் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி ஆன்லைன் விளையாட்டால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்,குறிப்பாக தற்கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக கூறியிருந்தனர்.

இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஆக. 3 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில்,இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று கூறி,தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.