‘ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள்’ - டி.ஜி.பி. சைலேந்திர பாபு வேண்டுகோள்

Tamil Nadu Police
By Thahir May 30, 2022 12:49 AM GMT
Report

தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டாம். அது ஒரு மோசடி விளையாட்டு.

‘ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள்’ - டி.ஜி.பி. சைலேந்திர பாபு வேண்டுகோள் | Don T Play Rummy Online Dgp Silent Babu

நடிகர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள் என்பதற்காக அந்த விளையாட்டில் யாரும்ஈடுபட வேண்டாம். பெரிய அளவில் பணத்தை இழப்பீர்கள்.

லட்சக்கணக்கான பணம் போய்விடும். நீங்கள் கடன் வாங்கி விளை யாடுவீர்கள். மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டும். அது அவமானத்தை தேடித்தரும்.

குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த வீடியோவை பார்த்தபிறகும், யாரும் அந்த தவறை செய்யாதீர்கள். இது தமிழக காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.