விசாரணை கைதி உயிரிழப்பு விவகாரம் - எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்..!
சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கெல்லிஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டிருந்தபோது, கத்தி மற்றும் கஞ்சாவுடன் சிக்கிய விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பதை தொடர்ந்து இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டது. அப்போது விசாரணையின்போது விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து எழும்பூர் பெருநகர குற்றவியல் 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் யஸ்வந்த் ராவ், தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் மற்றும் அயனாவரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக எதிரக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
சிபிசிஐடியிடம் கொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
குற்ற வழக்குகள் விக்னேஷ் மீது இருந்தார் அவரை முறையாக விசாரித்து இருக்க வேண்டும்.அவரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.
இதனால் தான் அவர் மரணமடைந்தார் என அவர் பேசினார்.
சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.