யார் இந்த நெல்லை கண்ணன்?
பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.
பிறப்பு
காமராசர், கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் நெருங்கிய பழகியவர் நெல்லை கண்ணன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு ந.சு.சுப்பையா பிள்ளை, தாயார் முத்து இலக்குமி ஆகிய தம்பதிக்கு ஜனவரி 27ஆம் தேதி மகனாக பிறந்தார்.
குடும்பம்
நெல்லை கண்ணனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர்.நெல்லை கண்ணனின் மூத்த மகன் சுரேஷ் கண்ணன் தமிழ் சினிமாவில் இணை இயக்குநராகவும், எழுத்தாளராகவும் உள்ளார்.
இரண்டாவது மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.
அரசியல்
காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர்.
அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார்.
இதையும் படியுங்கள்;செத்துடலாம்னு நினைக்கிறேன், முதலமைச்சரோட பேச அனுமதிக்கமாட்றாங்க : சோகத்தில் நெல்லை கண்ணன்
சிறையில் அடைப்பு
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான நெல்லை கண்ணன் சிறை சென்றார்.
கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர். ஆன்மிக சொற்பொழிவில் பேசும்போதே அவன், இவன் என்று விளித்துதான் நெல்லை கண்ணன் பேசுவார்.
விருதுகள்
கம்பர் ராமாயணத்தில் ராமன், ராவணனையும் அவன், இவன் என்றே பேசக்கூடியவர். 2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் தமிழ் இலக்கியங்களில் மிகப் பெரிய புலமை பெற்றவரும், தமிழ்க்கடல் என அழைக்கப்படுவருமான நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா 2021 சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது, அதில் விசிக சார்பில் பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் கதிர் விருது வழங்கப்பட்டது
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்!