டெல்லியில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

M K Stalin DMK Narendra Modi
By Irumporai Aug 17, 2022 06:36 PM GMT
Report

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுப் பரிவு வழங்கினார்.

முதலமைச்சர் வழங்கிய பரிசு

உடல் ஆரோக்கியத்தைப் பேணி காக்க உதவும் வகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.  

டெல்லியில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? | Cm Stalin Meets Pm Modi Gifts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமருக்கு வழங்கிய தானியங்கள் அடங்கிய பரிசுப் பெட்டியில் மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்பு கவுணி, கேழ்வரகு, கம்பு, சீரக சம்பா, சாமை, தினை, வரகு ஆகியவைகள் இருந்தன.

சந்திப்பில் பேசியது என்ன

சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்த சந்திப்பில், நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை காவிரி விவகாரம், மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற தேவைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது,