யார் இந்த நயன்தாரா?காதல் முதல் திருமணம் வரை - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணம் இன்று (09.06.2022) தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
யார் இந்த நயன்தாரா?
கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் நயன்தாரா இவர் இயற்பெயர் டயானா மரியா குரியன்.
2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து சந்திரமுகி,சிவகாசி,கஜினி,கள்வனின் காதலி,வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.
மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.
விருதுகள்
பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த நயன்தாரா 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதை வென்றார்.
2013,2015,2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றார். மேலும் கலைமாமணி விருது ,நந்தி விருது ஆகியவைகளை தன் நடிப்புகள் மூலம் மேற்கண்ட விருதுகளை வென்றார்.
கிசு கிசு பேச்சு
நடிகை நயன்தாரா குறித்து சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டது.அவர் இந்த இரண்டு நடிகர்களை தான் காதல் செய்யப்போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் கிசிகிசுக்கப்பட்டது.இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் நயன்தாரா.
காதல்
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இன்று 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
பிரமாண்ட திருமணம்
7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா இன்று 09.06.2022 மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து வந்த 20 சிவாச்சாரியர்கள் வேதமத்திரங்கள் முழுங்க திருமணத்தை நடத்தி வைத்தனர்.
திருமணத்தில் பிரபலங்கள்
நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஏராளாமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஷாருக்கான்,சூர்யா,போனிகபூர்,அனிருத்,அட்லி உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் திரைப்பிரபலங்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு திருமண வாழ்த்து தெரிவித்தனர்.
திருமண விருந்து
நயன்தாரா அசைவ பிரியராக இருந்தாலும் தம் கணவர் விக்னேஷ் குடும்பத்தினர் ஆசைக்கிணங்க சைவ விருந்து அளித்துள்ளார்.
என்ன உணவுகள் அது வாழைக்காய் வருவல், சேனக்கிழங்கு வருவல் ,சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு, காளான் மிளகு வறுவல் ,கேரட் பீன்ஸ் பொரியல்,பலாப் பழ பிரியாணி,பன்னீர் பட்டாணிக்கறி,சாம்பார் சாதம்,தயிர் சாதம்,பூண்டு மிளகு ரசம்,தயிர்,பருப்புக் கறி,அவியல்,மோர்க் குழம்பு,மிக்கன் செட்டிநாடு கறி (வேகன் உணவு),
உருளைக் கார மசாலா,காய் பொரிச்சது,பொன்னி ரைஸ்,பாதாம் அல்வா, இளநீர் பாயாசம்,கேரட் ஐஸ் கிரீம்.உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.
புகைப்படம் வைரல்
திருமணம் காலை நடந்த நிலையில் பிற்பகலில் தனது சமூக வளைத்தல பக்கத்தில் விக்னேஷ் சிவன் தங்களது திருமண புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.
அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
From Nayan mam … to Kadambari … to #Thangamey …. to my baby ….. and then my Uyir … and also my Kanmani ….. and now … MY WIFE ?☺️??❤️???❤️???? #WikkiNayanWedding #WikkiNayan pic.twitter.com/5J3QT71ibh
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
அவள் 9 என்றால் நான் 10 : நயன்தாராவை முத்தமிடும் விக்னேஷ் - வெளியான புகைப்படம்