நடிகை நயன்தாரா திருமணத்தில் குவிந்த திரைப்பிரபலங்கள் - ரஜினிக்கு மட்டும் சிறப்பு அனுமதி

Nayanthara Vignesh Shivan
By Thahir Jun 09, 2022 06:47 AM GMT
Report

நடிகை நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமண விழாவில் இன்று காலை நடைபெற்று முடிந்தது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா இவரும் விக்கேஷ் சிவனும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

முடிந்தது திருமணம்

இந்தநிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது.

நடிகை நயன்தாரா திருமணத்தில் குவிந்த திரைப்பிரபலங்கள் - ரஜினிக்கு மட்டும் சிறப்பு அனுமதி | Actress Nayantara Wedding

திருமண விழாவையொட்டி விக்‌னேஷ் சிவனின் சகோதரிக்கு நயன்தாரா 30 பவுன் தங்க நகை வாங்கி பரிசளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பரிசு பொருட்கள் வழங்கி இருக்கிறார்.

திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி என அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்களும்,போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

திரைப்பிரபலங்கள் பங்கேற்பு

நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஷாரூக்கான்,சரத்குமார்,போனிகபூர்,அட்லி,விக்ரம் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகை நயன்தாரா திருமணத்தில் குவிந்த திரைப்பிரபலங்கள் - ரஜினிக்கு மட்டும் சிறப்பு அனுமதி | Actress Nayantara Wedding

இந்த திருமணத்தில் ரஜனிகாந்த் மற்றும் சரத்குமார் மட்டுமே தங்களது செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் முன்னணி நடிகர்களின் குடும்பத்தினரின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டது.யாரும் திருமண நிகழ்வு குறித்து புகைப்படம் எடுத்துவிடக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

இந்த திருமண நிகழ்வில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தனது அன்பு காதலனை 7 ஆண்டுகளுக்கு பின் கரம் பிடித்துள்ளார் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.