அவள் 9 என்றால் நான் 10 : நயன்தாராவை முத்தமிடும் விக்னேஷ் - வெளியான புகைப்படம்
கோலிவுட் சூப்பர் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று (ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துள்ளனர். நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
இணைந்த இதயங்கள்
சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது.
அவள் 9 நான் 10
நானும் ரவுடி தான் மூலம் காதல் வயப்பட்ட இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
திருமணத்திற்கு பிறகு வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் -நயந்தாரா மணக்கோலத்தி; இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .
இந்த புகைப்படத்தை பகிர்ந்த விகேனஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் : அவள் 9 என்றால் நான் 10 கடவுளின் கிருபையொடும் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடு திருமணம் முடிந்தது என பதிவிட்டுள்ளார்.
On a scale of 10…
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
She’s Nayan & am the One ☝️☺️??
With God’s grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara ☺️?? #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8F
நடிகை நயன்தாரா திருமணத்தில் குவிந்த திரைப்பிரபலங்கள் - ரஜினிக்கு மட்டும் சிறப்பு அனுமதி