விக்னேஷ் சிவன் திருமணத்தில் புறக்கணிக்கபட்ட உறவினர் : வருத்தத்தோடு வாழ்த்து தெரிவித்த பெரியப்பா

Nayanthara Vignesh Shivan
By Irumporai Jun 09, 2022 07:45 AM GMT
Report

கோலிவுட் சூப்பர் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று (ஜூன் 9) மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துள்ளனர்.

ஆறு வருட காதல்

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.இவர்களின் திருமணம் எப்போது என்பதுதான் சினிமா உலகில்  பெரும் கேள்வியாக இருந்த நிலையில்சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது

விக்னேஷ் சிவன் திருமணத்தில் புறக்கணிக்கபட்ட உறவினர் :  வருத்தத்தோடு வாழ்த்து தெரிவித்த பெரியப்பா | Nayanthara Vignesh Sivan Wedding Uncle Not Invited

ஒரு மனமான திருமணம்

.இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடந்தது  திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்களை அழைத்துள்ள விக்கி -நயன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

விக்னேஷ் சிவன் திருமணத்தில் புறக்கணிக்கபட்ட உறவினர் :  வருத்தத்தோடு வாழ்த்து தெரிவித்த பெரியப்பா | Nayanthara Vignesh Sivan Wedding Uncle Not Invited

திருமணத்திற்கு வராத பெரியப்பா 

இந்நிலையில், விக்னேஷ் சிவனின் பெரியப்பா திருமண வாழ்த்தை தொலைக்காட்சியின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும் இருப்பினும் அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என வாழ்த்து கூற விரும்புவதாகவும் கூறியுள்ளார். திரைப்பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த நிலையில், சொந்த பெரியப்பாவுக்கு அழைப்பு விடுக்காதது பேசுபொருளாக மாறியுள்ளது. 

சிறப்பாக முடிந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம்.. யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா?