சிறப்பாக முடிந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம்.. யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

Nayanthara Vignesh Shivan
By Irumporai Jun 09, 2022 05:43 AM GMT
Report

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இன்று இருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

கரம்பிடித்த விக்னேஷ் சிவன்

மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர்.

திருமணத்தில் குவிந்த திரை நட்சத்திரஙகள்

மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

சிறப்பாக முடிந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம்.. யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா? | Nayanthara Weds Vignesh Shivan

சிறப்பாக முடிந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம்.. யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் தெரியுமா? | Nayanthara Weds Vignesh Shivan

இவர்களின் திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் OTT நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது , மேலும் இவர்களின் திருமணத்தையோட்டி 20,000 குழந்தைகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்துள்ளது விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி

நயன்தாரா திருமணத்தில் தண்ணீர் பாட்டில் கூட இப்படியா? லீக்கான புகைப்படம்