உச்சத்தை தொட்ட ஆண்டவர்..ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்..!

Kamal Haasan Tamil Cinema Lokesh Kanagaraj Vikram Movie
1 மாதம் முன்

நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விக்ரம் திரைப்படம் 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.ஆக்‌ஷன் திரில்லர் படமான விக்ரம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலுடன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம்,

உச்சத்தை தொட்ட ஆண்டவர்..ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்..! | Vikram Grossed Over Rs400 Crore Worldwide

ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத் ஜோஸ், மகேந்திரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் கடந்த 3-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் வெளியான நாட்கள் முதல் அத்திரைப்படத்திற்கான மவுசு அதிகரித்துக் கொண்டே சென்றது.

ரூ.400 கோடி வசூல் சாதனை 

தமிழகம் மட்டுமின்றி கேரளா போன்ற மாநிலங்களிலும்,துபாய் போன்ற நாடுகளிலும் திரைப்படம் வசூல்களை குவித்தது.

படம் வெற்றியடைந்ததை அடுத்து நடிகர் கமல் , இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்க்கு காரை பரிசளித்தார். அவருடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனங்களையும் பரிசாக கொடுத்திருந்தார்.

உச்சத்தை தொட்ட ஆண்டவர்..ரூ.400 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்..! | Vikram Grossed Over Rs400 Crore Worldwide

மேலும் இத்திரைப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலானது.

இதையடுத்து தற்போது விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது. விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் ரூ.400 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதெல்லாம் எனக்கு தேவைதான் : பஞ்சாங்கம் விவகாரத்தில் மாதவன் கருத்து

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.