ஆண்டவரின் விக்ரம் படம் வசூல் இத்தனை கோடிகளா? வாய் பிளக்கும் திரை பிரபலங்கள்..!
நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விக்ரம் படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்,சூர்யா,விஜய் சேதுபதி,ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி இருந்த இத்திரைப்படம் அதை பூர்த்தி செய்திருக்கிறது.
முதல் நாள் வசூல்
விக்ரம் படம் வெளியான முதல் நாளிலே தமிழகத்தில் (வெள்ளிக்கிழமை ரூ.20.61 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.
மேலும் இப்படம் முதல் நாளில் ரூ.32 கோடியையும்,உலக அளவில் ரூ.48.68 கோடியையும் வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் முதல் நாளிலே அதிக வசூலை பெற்ற தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.