’’மன்னிக்கவும் தம்பி சார் ‘’ : சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட உலக நாயகன்

Kamal Haasan Suriya Vikram
By Irumporai Jun 04, 2022 01:21 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. நடிகர் சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

’’மன்னிக்கவும் தம்பி சார் ‘’ : சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட உலக நாயகன் | Kamal Tweets Surya Anna

பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த நிலையில் விக்ரம்' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பதிவில் :

அண்ணா என்ற சூர்யா

அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது. இந்த கனவை நனவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி.

’’மன்னிக்கவும் தம்பி சார் ‘’ : சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட உலக நாயகன் | Kamal Tweets Surya Anna

ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணா என்று அழைத்து  சூர்யாவுக்கு  நடிகர் கமல்ஹாசன் பதில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மன்னிகவும் தம்பி

அந்த பதிவில் நடிகர் கமல்ஹாசன், 'அன்புள்ள சூர்யா தம்பி, ஏற்கனவே உங்களிடம் அன்பு இருந்தது. இப்போது அது மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி, மன்னிக்கவும் தம்பி சார்." என்று கூறியுள்ளார்.