ஆக்ஷனில் மிரட்டிவரும் விக்ரம்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் விமர்சனங்களையும், பாராட்டுகளையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.
விக்ரம் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தை தெறிக்கவிட்டது.
ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்தப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ். மேலும் கடைசி நேர ட்விஸ்ட்டாக இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார்.
நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது இந்தப்படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் இணையத்தில் கலைகட்டி வருகிறது.
விக்ரம் படம் வேற லெவலில் ஆக்ஷனில் மிரட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஹாலிவுட் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் மிரட்டியுள்ளதாகவும், நடிப்பில் அனைவருமே மிரட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இண்டர்வெல் சீனில் மிகப்பெரிய ஹைப் கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ஃபகத் ஃபாஸில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பும் வேற லெவல் என சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். முதல் பாதி வெறித்தனம் என்றும் இரண்டாவது பாதி டெர்ரிஃபிக் என்றும் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.
மேலும் அனிருத் பின்னணி இசையில் தெறிக்கவிட்டுள்ளதாகவும், கண்டிப்பாக இந்தப்படம் லோகேஷின் பேன் பாய் சம்பவம் என்றும் கொண்டாடி வருகின்றனர்.