இதெல்லாம் எனக்கு தேவைதான் : பஞ்சாங்கம் விவகாரத்தில் மாதவன் கருத்து

Madhavan Viral Photos
By Irumporai Jun 27, 2022 06:35 AM GMT
Report

'இந்த விமர்சனங்களுக்கெல்லாம் தகுதியானவன் தான் என நடிகர் மாதவன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 ரக்கெட்ரி நம்பி விளைவு

சென்னையில் 'ராக்கெட்ரி நம்பி விளைவு' படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மாதவன், ''அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30-வது தடவை, 32-வது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள்.

இதெல்லாம் எனக்கு தேவைதான்  : பஞ்சாங்கம் விவகாரத்தில் மாதவன் கருத்து | Madhavan React Trolls Panchangam Rocketry

பஞ்சாங்கம் தான் காரணம்

அதிநவீன இன்ஜின்தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.

இதெல்லாம் எனக்கு தேவைதான்  : பஞ்சாங்கம் விவகாரத்தில் மாதவன் கருத்து | Madhavan React Trolls Panchangam Rocketry

கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது, இந்தியா அப்போது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செல்ல 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து பஞ்சாங்கம் தான் செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் என்று தெரிவித்திருந்தார். 

ட்ரோல் செய்யப்பட்ட மாதவன்

மாதவனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் நெட்டிசன்கள் பலரும் கேலி செய்தனர், இந்த நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்தில் மாதவனை பலர் கேலி செய்வதாக வெளியான செய்தியை ட்விட்டரில் நடிகர் மாதவனே ரீட்வீட் செய்து இதற்கு தான் தகுதியானவன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதெல்லாம் எனக்கு தேவைதான்  : பஞ்சாங்கம் விவகாரத்தில் மாதவன் கருத்து | Madhavan React Trolls Panchangam Rocketry

இதுகுறித்து அவர் தனது பதிவில், அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இந்த விமர்சனங்களுக்கு தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன்.

அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார் என்று பதிவிட்டுள்ளார்.   

சனாதன தர்மம் மதமும் வேறு : பல்டியடித்த ஆளுநர் ரவி