சனாதன தர்மம் மதமும் வேறு : பல்டியடித்த ஆளுநர் ரவி
சனாதனமும் மதமும் வெவ்வேறானவை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ரவி
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது என்றும் பேசினார்.
ஆளுநரின் இந்த பேச்சிற்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் , இந்த நிலையில் சனாதனமும் மதமும் வெவ்வேறானவை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சனாதனம் வேற மதம் வேற
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லா நூற்றாண்டு விழாவில் பேசிய ஆளுநர் கூறுகையில், “சனாதன தர்மும் மதமும் வேறு வேறு. சனாதனத்தை மதத்துடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.
மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர்” என்றார். காந்தி, விவேகானந்தர் கூறிய ஆன்மீக வழியில் நாடு சிந்திக்க, செயல்பட தொடங்கியுள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவானது இந்தியா : ஆளுநர் ஆர்.என் ரவி