கையை பிடித்து கெஞ்சியும் என்னுடன் நடிக்க மறுத்தார் - பிரபல நடிகர் குறித்து மனம் திறந்த கமல்!
தனது படத்தில் நடிக்குமாறு பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் கையை பிடித்து கெஞ்சியும் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1992-ம் ஆண்டு கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பார்த்த திரைப்படம் ’தேவர் மகன்’.

இந்த படத்தின் இந்தி ரீமேக் 1997-ம் ஆண்டு தயாரானது. அப்போது அந்த படத்தில் சிவாஜிகணேசன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரிடம் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

கமல்ஹாசன் நடிகர் திலீப்குமாரின் கையைப் பிடித்து கெஞ்சிக் கேட்டதாகவும் ஆனால் தற்போது தான் நடிப்பதில்லை என்றும் தனது முடிவை மாற்ற முடியாது என்றும் திலீப்குமார் கூறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதனை அடுத்து வேறு வழியின்றி அந்த கேரக்டரில் அம்ப்ரிஷ்புரி நடித்தார் என சமீபத்தில் ’விக்ரம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் தெரிவித்தார்.
கமல்ஹாசன் படத்தில் நடிக்க முடியாது என பழம்பெரும் நடிகர் திலீப் குமார் கூறிய தகவல் தற்போது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan