வைரலாகும் விஜய்யின் மச்சினிச்சி புகைப்படம் - ரசிகர்கள் ஆர்வம்!

Vijay Only Kollywood Gossip Today Viral Photos
By Sumathi Jul 07, 2022 07:00 AM GMT
Report

விஜய் தற்போது 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நடித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில், இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய்

விஜய்யை ரசிகர்கள் எந்தளவு கொண்டாடுகிறார்களோ அதே அளவு அவரை சேர்ந்தவர்களையும் கொண்டாடி வருகின்றனர். இவரது படங்கள் எப்படி இருந்தாலும் சரி, அதனை கொண்டாடுவதற்கென்றே தனியாக ஒரு கூட்டம் உள்ளது.

vijay

இவர் சங்கீதா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் சொர்ணலிங்கம் என்பவரது மூத்த மகள் ஆவார்.

சங்கீதா

விஜய் மற்றும் சங்கீதா இவர்களின் அன்பின் அடையாளமாக தற்போது இவர்களுக்கு ஜேசன் விஜய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.

sangeetha

தற்போது விஜய் அவர் குடும்பத்தினருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருடன் உடன் இருக்கும் பெண் யார் என்கிற கேள்வி பலருக்குள்ளும் எழுந்து வந்தது.

முக சாயல்

அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் வேறு யாருமில்லை, விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொந்த தங்கை தானாம். அக்கா, தங்கை இருவரும் ஒரே மாதிரியான முக சாயலை கொண்டு இருக்கின்றனர்.

சொர்ணலிங்கத்தின் இரண்டாவது மகளான இவர் லண்டனில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தற்போது இந்த படம் தான் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல்

தற்போது தளபதி விஜய் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் படுபிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பணிகளை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' படத்தில் நடிக்கவிருக்கிறார்.     

காளியை தொடர்ந்து சிவனும்-பார்வதியும்.. தொடர் சர்ச்சையில் லீனா மணிமேகலை!