பிரபல பாடகி சங்கீதா சஜித் உயிரிழந்தார் - ரசிகர்கள் அதிர்ச்சி

By Nandhini May 22, 2022 11:46 AM GMT
Report

கேரளாவைச் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் (46). இவர் தமிழில் ‘மிஸ்டர் ரோமியா’ படத்தில் ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ பாடலை பாடினார்.

இந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சங்கீதா சஜித் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் சங்கீதா சஜித் பாதிக்கப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று சங்கீதா சஜித் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்க உள்ளது. சங்கீதாவின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் நடிகர், நடிகர்கள் உட்பட சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாடகி சங்கீதா சஜித் உயிரிழந்தார் - ரசிகர்கள் அதிர்ச்சி | Sangeetha Sajid