விஜய்-தோனி இணைந்து கலக்கும் அடுத்த படம் - குதூகலத்தில் ரசிகர்கள்!

Vijay MS Dhoni Only Kollywood Gossip Today
By Sumathi Jun 19, 2022 05:39 AM GMT
Report

நடிகர் விஜய் நடிக்கவுள்ள படத்தை கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்- தோனி காம்போ

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வருகிறார்.

விஜய்-தோனி இணைந்து கலக்கும் அடுத்த படம் - குதூகலத்தில் ரசிகர்கள்! | Is Vijay To Act Cricketer M S Dhoni Production

அதுவும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் முடிவுக்கு வந்துவிடும் என்றே கூறப்படுகிறது. தோனியைப் பொறுத்தவரை, கிரிக்கெட் தவிர பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுவருகிறார்.

நடித்துக்கொடுக்கத் தயார்

அந்த வரிசையில் தற்போது சினிமா பக்கமும் கால் பதிக்க முடிவெடுத்துள்ளாராம் தோனி. அந்த வகையில் சில டாப் நடிகர்களின் படங்களைத் தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளாராம்.

விஜய்-தோனி இணைந்து கலக்கும் அடுத்த படம் - குதூகலத்தில் ரசிகர்கள்! | Is Vijay To Act Cricketer M S Dhoni Production

அதன்படி, கோலிவுட்டிலிருந்து தனது திரைப் பயணத்தைத் தொடர ப்ளான் செய்துள்ள தோனி, இதற்காக நடிகர் விஜய்யை அணுகி, தனது படத்தில் நடித்துக்கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளாராம்.

தகவல்

தோனியின் தயாரிப்பில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ள நடிகர் விஜய், அத்துடன் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, தோனியின் தயாரிப்பில் உடனடியாக நடிக்க முடியாது எனக் கூறியுள்ள விஜய்,

ஏற்கெனவே சில நிறுவனங்களுடன் தனது அடுத்த சில படங்களைக் கமிட் செய்துள்ளதால் இன்னும் ஓரிரு படங்களுக்குப் பின்னர் நடித்துக்கொடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளாராம். இத்தகவலின் உண்மை விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்பே தெரியவரும்.     

மனதில் பட்டதை பேசுவேன்.. சர்ச்சை குறித்து சாய்பல்லவி விளக்கம்! வைரலாகும் வீடியோ