மனதில் பட்டதை பேசுவேன்.. சர்ச்சை குறித்து சாய்பல்லவி விளக்கம்! வைரலாகும் வீடியோ
பிரபல நடிகை சாய் பல்லவி தான் வெளியிட்ட ஒரு அறிக்கை மூலம் பெரிய விவாதத்தில் உள்ளார். காஷ்மீர் பைல்ஸ் பார்த்த பிறகு, சாய் பல்லவி காஷ்மீரி பண்டிட்களைப் பற்றி பேசியதற்கு நிறைய எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது.
நடிகை சாய் பல்லவி
வேணு உடுகுலா இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விராட பருவம். ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சாய்பல்லவி மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.
இந்தப் படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. டி சுரேஷ் பாபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்துக்காக தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளில் புரோமோஷன் நிகழ்வில் சாய்பல்லவி பங்கேற்றிருக்கிறார்.
என்ன வித்தியாசம்?
தற்போது ஒரு யூடியூப் சேனலில் படத்தின் புரோமோஷனுக்காக பேசிய பேச்சு சர்ச்சையாக உருவெடுத்தது. அந்தப் பேட்டியில், காஷ்மீர் இனப்படுகொலைக்கும், தற்போது பசுக்களுக்காக மனிதர்களை அடிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் காஷ்மீரி பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அவற்றை மத மோதல்களாகவே பார்க்கிறோம். சில நாட்களுக்கு முன் ஒரு மாடு, வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டது.
சர்ச்சை
டிரைவர் ஒரு முஸ்லிம். சிலர் அவரை அடித்து, ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்புமாறு மிரட்டினர். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மதங்களைக் கடந்து நாம் மனிதர்களாக இருக்க வேண்டும்.
இடது சாரி அல்லது வலதுசாரி என யாராக இருந்தாலும் பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்து இருந்தார். இதனை சர்ச்சையாக உருவாக்கியுள்ள சிலர், காஷ்மீர் படுகொலையை கொச்சைப்படுத்துவதாக சாய்பல்லவியை விமர்சித்து வருகின்றனர்.
விளக்கம்
இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சாய் பல்லவி வீடியோ வெளியிட்டு விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அதன் படி அதில் அவர் கூறியதாவது., நான் ஒரு நடுநிலையானவள், தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவள்.
முதன்முறையாக உங்களிடம் இப்படிப் பேசுகிறேன். நான் சொன்னதை எப்படி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நேர்காணலில் நான் கூறியது சரியாக சித்தரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டம் போன்ற சீர்திருத்தம் அவசியம் - நடிகை கங்கனாரனாவத்