பிரபல கிரிக்கெட் வீரர் தோனி மீது வழக்குப்பதிவு..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் 7 பேர் மீது பீகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட்டின் காசோலை பவுன்ஸ் செய்யப்பட்டதால்,எஸ்கே எண்டர்பிரைசஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த காசோலையின் மதிப்பு 30 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தோனி நியூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை சந்தைப்படுத்ததலில் ஊக்குவித்தார் என்பது அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அஜய் குமார் மிஸ்ராவுக்கு அனுப்பப்பட்டது.வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து எஸ்கே எண்டர்பிரைஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் மதிப்பிலான உரங்களை ஆர்டர் செய்தது.
நிறுவனம் தயாரிப்பை வழங்கியது, ஆனால் டீலர் வழங்குநருடன் இணங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது,
இதனால் ஒரு பெரிய அளவு தயாரிப்பு விற்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு, மீதமுள்ள உரத்தை அந்த நிறுவனம் திரும்பப் பெற்று, அதற்குப் பதிலாக, 30 லட்ச ரூபாய்க்கான காசோலையை ஏஜென்சிக்கு வழங்கினர்.
காசோலை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது ஆனால் அது பவுன்ஸ் ஆனது. அந்த நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் பிறகு SK Enterprises நீரஜ் குமார் நிராலா, சம்பந்தப்பட்ட தயாரிப்பை விளம்பரப்படுத்திய தோனி மற்றும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.