காளியை தொடர்ந்து சிவனும்-பார்வதியும்.. தொடர் சர்ச்சையில் லீனா மணிமேகலை!
சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் ஜோடியாக நின்று சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள லீனா மணிமேகலை இது வேறு எங்கேயோ எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார்.
லீனா மணிமேகலை
தமிழ் சினிமாவில் சில முக்கியமான பிரச்சனைகளை தைரியமாக வெளிப்படையாக உலகிற்கு எடுத்துரைக்கும் கவிஞர்களில் ஒருவர் லீனா மணிமேகலை.
ஒதுக்கப்பட்ட ஜாதி என சொல்லப்படும் மக்களின் நிலைமை, குழந்தை திருமணம், ஓரின சேர்க்கை, பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டங்கள் என பல bold கதைகளை documentary திரைப்படமாக எடுத்துரைத்தவர்.
காளி
இவர் தற்போது காளி என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் எடுக்கிறார். அதன் போஸ்டரில் காளி வேடத்தில் ஒருவர் சிகரெட் பிடிப்பது போல் இருக்க, கையில் LGBT கொடியை வைத்திருப்பது போல இருப்பது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
Elsewhere…. pic.twitter.com/NGYFETMehj
— Leena Manimekalai (@LeenaManimekali) July 7, 2022
இதனால் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சிலர் ட்விட்டரில் டிரண்ட் செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ட்விட்டர் நிறுவனம்
இதன் பேரில் லீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை நீக்கி ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. டொரண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம், இந்த ஆவணப்படத்தை திரையிடப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தற்போது மேலும் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார் லீனா மணிமேகலை. அதில், சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் ஜோடியாக நின்று சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து,
சிவன் - பார்வதி
இது வேறு எங்கேயோ எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். காளி போஸ்டருக்கே கொதித்தெழுந்த நெட்டிசன்கள், தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த பின் அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
உக்ரைனுக்கு ஆதரவு - பிரேசில் மாடல் அழகி போரில் பலி!