நயன்தாரா,விக்னேஷ் தொல்லை தாங்க முடியல - கொந்தளித்த ரசிகர்..!

Nayanthara Vignesh Shivan Thailand Marriage
1 மாதம் முன்
100 Shares

நடிகை நயன்தாரா கடந்த 9 ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஹனிமூன் சென்றுள்ள அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அறிமுகம்

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

நயன்தாரா,விக்னேஷ் தொல்லை தாங்க முடியல - கொந்தளித்த ரசிகர்..! | Unable To Bear The Harassment The Turbulent Fan

காதல்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

பிரமாண்ட திருமணம்

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

நயன்தாரா,விக்னேஷ் தொல்லை தாங்க முடியல - கொந்தளித்த ரசிகர்..! | Unable To Bear The Harassment The Turbulent Fan

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். 

சர்ச்சை 

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்ற அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அப்போது நயன்தாரா செப்பல் அணிந்து கோவில் வளாகத்திற்குள் சென்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரினார்.

நயன்தாரா,விக்னேஷ் தொல்லை தாங்க முடியல - கொந்தளித்த ரசிகர்..! | Unable To Bear The Harassment The Turbulent Fan

பெற்றோரை சந்தித்த நயன்தாரா 

தங்கள் காதல் திருமணத்தை பெற்றோர் இல்லாமல் நடத்திய நயன்தாரா தனது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக கேரளா சென்றார்.

நயன்தாரா,விக்னேஷ் தொல்லை தாங்க முடியல - கொந்தளித்த ரசிகர்..! | Unable To Bear The Harassment The Turbulent Fan

அங்கு தனது காதல் கணவருடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்த அவர் தனது உறவினர்களிடம் ஆசி பெற்றார்.

ஹனிமூன் 

திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்றுள்ளனர். அங்கு உற்சாகமாக தங்கள் தேனிலவை கொண்டாடி வருகின்றனர்.

தங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

தற்போது நயன்தாரா புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன் அதில் நயன்தாரா தனது செல்போனில் புகைப்படம் எடுக்கிறார்.

நயன்தாரா,விக்னேஷ் தொல்லை தாங்க முடியல - கொந்தளித்த ரசிகர்..! | Unable To Bear The Harassment The Turbulent Fan

புகைப்படத்தை பதிவேற்றிய விக்னேஷ் சிவன் தலைப்பாக அவள் என்னைக் கிளிக் செய்யும் போது நான் அவளைக் கிளிக் செய்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

நயன்தாரா,விக்னேஷ் தொல்லை தாங்க முடியல - கொந்தளித்த ரசிகர்..! | Unable To Bear The Harassment The Turbulent Fan

அவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் இந்த காதலர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆண்டி..ஆண்டி...என்று கூப்பிட்ட சிறுவன் கடுப்பான நயன்தாரா..!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.