`நானும் ரவுடி தான் ‘ பெண் போலீசாரை கடுப்பேத்திய டம்மி ரவுடி!
சென்னையில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஒட்டியதுடன் பெண் போலீசாரை மிரட்டிய நபரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை புழலில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டியை நிறுத்தி விசாரணை செய்தனர்.
அப்போது, அங்கிருந்த பெண் போலீசார் ஒருவரை பார்த்து, தன் மீது வழக்குப்பதிவு செய்தால் வேறு இடத்திற்கு மாற்றி விடுவேன் என அவரை மிரட்டியதுடன் அங்குவந்த போக்குவரத்து போலீசாரையும் சினிமா பாணியில், '' தான் ரவுடி என்றும் “ , ‘ வழக்குப்பதிவு செய்த அனைவரையும் ஒரு மணி நேரத்தில் வேறு இடத்திற்கு மாற்றி விடுவேன்'' எனவும் அந்த போதை ஆசாமி மிரட்டியுள்ளார்.
பின்னர் அவர் குடித்திருக்கிறாரா என பரிசோதனை மேற்கொண்டதில், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.