கால் கட்டை விரல் இந்த மாதிரி இருக்கா? உங்க குணாதியம் இதுதான்!
கால் விரல்களின் வடிவம் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கால் விரல்
ஒருவரின் உடலமைப்பைப் பொறுத்து அவரின் குணாதியசங்கள் எப்படி இருக்கும் என்று கணித்து விடமுடியும். அதுபோல கால்களில் உள்ள விரல்களின் அமைப்பை வைத்தும் அவர்களைக் கணிக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றனர் .
அது பற்றி விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். உங்கள் கால் பாதம் சதுர வடிவத்திலும், அதாவது அனைத்து கால் விரல்களும் ஒரே அளவிலிருந்தால், நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? நீங்கள் யதார்த்தமும் நம்பிக்கைக்கு உரியவர்.
கடுமையான உழைப்பாளி. கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவராக இருப்பீர்கள் நட்பாக பழக்கக்கூடிய நபர் என்று பொருள். ஒருவரின் கால் பெருவிரலை விட இரண்டாம் விரல் நீளமாக இருந்தால்,நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?
குணாதியசங்கள்
படைப்பாளி , உங்களிடம் இயல்பாகவே சாகச குணம் இருக்கும். புதிய சவால்களை ஆர்வத்தோடு எதிர்கொள்வீர்கள். உங்களை வெளிப்படுத்தப் பல வித்தியாசமான வழிகளில் முயல்வீர்கள்.
அதில் வெற்றியும் அடைவீர்கள் .உங்களின் பெருவிரல் நீளமாகவும், அருகில் உள்ள விரல்கள் வளைந்து இருந்தால்,நீங்கள் எப்படிபட்டவர் தெரியுமா? சுயமாக யோசிக்கக் கூடியவர்.
பிடிவாத குணம் ,படைப்பாற்றல் அதிகமாக இருக்கும் அடுத்தவர்களின் ரகசியங்களைப் பேணிக் காப்பதால் நம்பிக்கைக்கு உரிய மனிதராக இருப்பார்களாம்.