இந்த பிரச்சனைக்கு கடுகு எண்ணெய் தான் ஒரே தீர்வு - இதை பாருங்க!
கடுகு எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய்யில் மோனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட், ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது.
இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல், இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
சளி மற்றும் இருமல் அதிகமாக இருந்தால் கொதிக்கும் நீரில் சில துளிகள் கடுகு எண்ணெய்யை விட்டு அதனை முகர்ந்து பார்ப்பதன் மூலம், இருமலுக்கு இன்ஹேலராக இதைப் பயன்படுத்தலாம். மேலும் கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
நன்மைகள்
கடுகு எண்ணெய்யை கைகளில் அரிப்பு, புண்கள், தேமல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கடுகு எண்ணெய்யைத் தேய்த்து வந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது.
கடுகு எண்ணெய்யில் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ALA) உள்ளதால் முடக்கு வாதம் போன்ற நோய்களுடன் தீர்வாக உள்ளது.
சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கடுகு எண்ணெய்யின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
கடுகு எண்ணெய் உணவில் பயன்படுத்தி வந்தாலும் சைனஸ் தொல்லை நீங்கும். இதுபோன்ற வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன் எப்போதும் மருத்துவரை அணுகுவது நல்லது.