காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட்டால்.. உடலில் நடக்கும் மாற்றம்!
பப்பாளியில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிக அளவில் உள்ளனர்.
பப்பாளி
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குப் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது .பல்வேறு பழங்களில் பல வகைகள் உள்ளது. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
அந்த வகையில் ஆண்டு முழுவதும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பழ வகைகளில் ஒன்று பப்பாளி. இந்த பப்பாளியில் பொட்டாசியம், நார்ச்சத்து, மற்றும் வைட்டமின்கள் ஏ, வைட்டமின்கள் சி ,வைட்டமின்கள் ஈ போன்றவை அதிகம் உள்ளன.
பப்பாளிப் பழத்தைக் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால்,நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும். மேலும் இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவி புரியும்.
நன்மைகள்
அதிலும் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைக்க உதவும். தொடர்ந்து பப்பாளியைத் தினமும் உட்கொண்டு வருவதால் நமது உடலில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
மேலும் சரும சுருக்கங்களை நீக்கி பொலிவான சருமம் கிடைக்கும்
அதுமட்டுமில்லாமல் நீண்ட நாள் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள் பப்பாளியைத் தொடர்ந்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும்.