இந்த பிரச்சனை உள்ளவர்களெல்லாம் செவ்வாழை சாப்பிடலாமா? ஆச்சர்ய தகவல்!

Sumathi
in ஆரோக்கியம்Report this article
செவ்வாழைப் பழத்தின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.
செவ்வாழை
செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் தான் சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பிவிடுகிறது.
இதிலுள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. இதய நோய் மற்றும் புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்கிறது. கால்சியம் எலும்பை வலுப்படுத்துகிறது. செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும்.
பலன்கள்
சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன. ரத்த சோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழங்களை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தலைமுடியில் உள்ள பொடுகு குறைகிறது. நாள்பட்ட மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.
தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.