இந்த வயதில் இவ்வளவு ரத்த சர்க்கரை அளவுதான் இருக்க வேண்டும் - இதை கண்டிப்பா நோட் பண்ணுங்க
வயது அடிப்படையில் ரத்த சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ரத்த சர்க்கரை
இளம் வயதிலேயே பலர் சர்க்கரை நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த வகையான நோய்களை விரைவாக நாம் அறிந்து கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம்.
உணவு சாப்பிட்ட பிறகு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 140 மி.கி. இருக்க வேண்டும்.
அளவு நிலை
அதே சமயம், உணவுக்கு முன், 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ரத்த சர்க்கரை அளவு டெசிலிட்டருக்கு 99 மி.கி. இருக்க வேண்டும். 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு, அவர்களின் உணவுக்கு முன் சர்க்கரை அளவு 90 முதல் 130 mg/dL வரை இருக்க வேண்டும்.
அதே சமயம், உணவுக்குப் பின் 140 mg/dlக்கு குறைவாகவும், இரவு உணவிற்குப் பிறகு 150க்கு குறைவாகவும் இருக்க வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.
அதிகபடியான சர்க்கரை, உப்பு, குளிர் பானங்கள், இனிப்புகளை தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.