உள்ளாடைகளுக்கு Expiry Date? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! எச்சரிக்கையா இருங்க..
ஒருவேலை, ஒரே டவலையோ அல்லது சோப்பையோ பயன்படுத்துவதால் ஒருவருடைய உடலில் இருக்கும் கிருமிகள் மற்றவருடைய உடலிற்கு எளிமையாகப் பரவும் அபாயம் உள்ளது.
உள்ளாடைகள்
பொதுவாக நாம் பயன்படுத்தும் எந்தவித பொருளுக்கும் காலாவதி தேதி உள்ளது. அப்படி காலாவதி தேதிக்கு அப்பால் இந்த பொருள்களைப் பயன்படுத்துவது உடலிற்கு ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.
குறிப்பாக மருந்துகள், உணவுகள், எண்ணெய் வகைகள் மற்றும் லோஷன்கள் , பிளாஸ்டிக் பொருள்கள் வரை காலாவதி தேதிகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி உள்ளது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளுக்கு மேலாக உள்ளாடைகளை முறையாகப் பயன்படுத்துவது தனிப்பட்ட சுகாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீங்கள் நினைத்ததை விட நீண்ட உள்ளாடைகளை அணிவதன் மூலம் சுகாதாரத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் .
ஒரு உள்ளாடையை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்பதில் கால வரம்பு இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் உள்ளாடைகளை மாற்றுவது சிறந்தது.இதன் மூலம் பல வகையான தொற்று நோய்களைத் தவிர்க்கலாம்.
Expiry Dates
குறிப்பாக நீங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகள் பழையதாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருந்தால், அதை அணியாமல் இருப்பது நல்லது. அதுமட்டுமல்ல.. உள்ளாடைகளைத் துவைத்தாலும் துர்நாற்றம் வீசினால்.. பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள அனைவரும் ஒரே டவலை ஒன்றாகப் பயன்படுத்தக் கூடாது.
குளிக்கும் போதும் அனைவரும் ஒரே சோப்பைப் பயன்படுத்த வேண்டாம். ஒருவேலை, ஒரே டவலையோ அல்லது சோப்பையோ பயன்படுத்துவதால் ஒருவருடைய உடலில் இருக்கும் கிருமிகள் மற்றவருடைய உடலிற்கு எளிமையாகப் பரவும் அபாயம் உள்ளது.
இதனால் இந்த முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்தால், நோய் தொற்றுகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.