விராட் கோலி, சமந்தா என பிரபலங்கள் விரும்பும் 'ஐஸ் பாத்' சிகிச்சை - என்ன காரணம்?
ஐஸ் பாத் சிகிச்சை குறித்த தகவல்களை பார்ப்போம்..
ஐஸ் பாத் சிகிச்சை
திரைத்துறை நட்சத்திரங்கள் போன்ற பிரபலங்களின் மத்தியில் ஐஸ் பாத் சிகிச்சை பரவலாக காணப்படுகிறது. தொடர்ந்து மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களிலும் வந்துவிட்டது.
உடல்வலி நீங்கும், மன அழுத்தம் போகும், புத்துணர்வு கிடைக்கும் என்றெல்லாம் இதற்குக் காரணங்களாக கூறப்படுகிறது. ஐஸ் கட்டிகள் நிறைந்த ஒரு தொட்டியில் (Bathtub) குளிப்பதுதான் ஐஸ் பாத் (Ice bath).
எச்சரிக்கை தேவை
ஐஸ் பாத் எடுக்கும்போதும் ஒருவருக்கு எண்டார்பின்கள் (Endorphins) சுரந்து இதமான மனநிலை உண்டாகும். சுறுசுறுப்பு கூடும். உடலின் வலி குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் என்கிற ஹார்மோன் குறையும் என்று சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தற்போதைக்கு ஐஸ் பாத் ஓர் ஆதரவு சிகிச்சை (Supportive treatment) போல கூடுதல் உதவியையே செய்யும்.
எனவே, ஐஸ் பாத் எடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. நம் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொண்டுதான் ஐஸ் பாத் எடுக்க வேண்டும்.