30 வயதை கடந்துட்டீங்களா? அவசியம் இந்த இரத்தப் பரிசோதனைகளை செய்யனும்!
குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில இரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.
இரத்தப் பரிசோதனைகள்
ஒரு நபர் தனது 30 வயதிற்கு பிறகு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சீரான இடைவெளியில் சில முக்கிய ரத்த பரிசோதனைகளை செய்துக்கொள்ள வேண்டும்.
B12 குறைந்த அளவு இருந்தால் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, பலவீனம் மற்றும் சமநிலை இழப்பு உள்ளிட்ட சில பிரச்சனைகள் ஏற்பட கூடும். வைட்டமின் டி லெவல்களில் உள்ள பற்றாக்குறையை கண்டறிய வைட்டமின் டி ரத்த பரிசோதனை உதவுகிறது.
HbA1c ரத்த பரிசோதனையானது கடந்த மூன்று மாதங்களில் ரத்தத்தில் இருந்த சராசரி ரத்த சர்க்கரை அளவு பற்றிய தகவல்களை வழங்குகிறது. மேலும் நீரிழிவு அளவைக் கண்டறியவும் உதவுகிறது.
காம்ப்ரஹென்சிவ் மெட்டபாலிக் பேனல் டெஸ்ட் (comprehensive metabolic panel test) என்றழைக்கப்படும் ரத்த பரிசோதனையானது கூடுதல் புரதங்கள் மற்றும் பொருட்களுடன், மெட்டபாலிக் பேனல் தொடர்பான அனைத்து அளவுருக்களையும் கண்காணிக்க உதவுகிறது.
அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் ஹார்ட் ஸ்ட்ரோக் மற்றும் பிற இதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, ஒவ்வொருவரும் தங்கள் கொலஸ்ட்ரால் லெவலை லிப்பிட் ப்ரொஃபைல் டெஸ்ட் மூலம் சரிபார்ப்பது நல்லது.
கல்லீரல் நொதி அளவுகளை கண்காணிக்க மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்து கல்லீரல் நோய்களைக் கண்டறிய லிவர் ஃபங்ஷன் டெஸ்ட் பயன்படுகிறது.