தினமும் தலைக்கு குளிக்கலாமா, கூடாதா? ஷாம்புவை எப்படி பயன்படுத்தலாம்?
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்க வேண்டும்? என்ற கேள்வி பெரும்பாண்மையாக இருந்து வருகிறது.
Head bath
ஒருவரது தலை முடியானது அமைப்பு மற்றும் தரத்தில் நார்மலாக இருக்கிறது என்றால், தினமும் தலைக்கு குளிக்காமல் சில நாட்களுக்கு ஒருமுறை வாஷ் செய்து கொள்ளலாம்.
ஆனால் அதிக தூசி மற்றும் அழுக்குகளை ஈர்க்கும் தலை முடியை கொண்டவர்கள், அடிக்கடி தீவிர வேலைகளில் ஈடுபடுபவர்கள், வேலை காரணமாக அதிக வியர்வை சிந்துபவர்கள் செய்பவர்கள், குறிப்பாக ஈரப்பதமான தட்பவெப்ப நிலையில் வசிப்பவர்கள்,
Shampoo wash
வேலை நிமித்தமாக வெளியில் பயணம் செய்து கொண்டே இருப்பவர்கள் அடிக்கடி குளிக்க வேண்டும். இதுகுறித்து நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்றில், அதிக முறை தலைக்கு குளித்தவர்களுக்கு குறைந்த அரிப்பு மற்றும் வறட்சியே இருந்தது.
பொடுகை உண்டாக்கும் பூஞ்சையின் வளர்ச்சி குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. சருமத்திற்கு ஏற்ற பாதுகாப்பான தயாரிப்பை (ஷாம்பு) கொண்டு எப்போது வேண்டுமானாலும் ஹேர் வாஷ் செய்யலாம். ஷாம்பு கொண்டு உச்சந்தலையை மட்டும் அலசவும். முடியின் முனைகளுக்கு கண்டிஷனரை பயன்படுத்தலாம்.
இரவில் 1 முறைக்கு மேல் எண்ணெய் தடவ வேண்டாம். அதிக எண்னெயும் பயன்படுத்தக் கூடாது.
அகலமான பல் சீப்பை பயன்படுத்த வேண்டும். முடி ஈரத்துடன் இருக்கும்போது சீவ கூடாது. ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்துவது தலைமுடியை உலர்த்தி எளிதில் உடைய கூடியதாக மாற்றும்.