தலைமுடி சரசரவென வளர இதோ பாட்டி வைத்தியம்!
தலைமுடி உதிர்வு என்பது ஆண்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல, பெண்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு. தலைமுடி உதிர்வால் பெண்களை விட ஆண்களுக்கு தான், முடியெல்லாம் கொட்டி வழுக்கையாகிறது.
இதனால் பல ஆண்கள் இளமையிலேயே வயதானவர்கள் போன்று காட்சியளிக்கிறார்கள். இந்த காரணத்தினால் பல ஆண்கள் திருமணமாவதில் சிக்கலை சந்திக்கிறார்கள். தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன.
முடியின் நுனியில் வெடிப்பானது மன அழுத்தம், ஆரோக்கியமற்ற லைஃப்ஸ்டைல் பழக்கங்களால் ஏற்படும். முடி வெடிப்பு ஏற்பட்டிருந்தால் கூந்தல் வளர்ச்சி தடைபடாது. ஆனாலும் அதன் தாக்கம் நுனியிலிருந்து வேர் வரை மேல்நோக்கிப் பரவலாம்.
இதனால் முடி ஆரோக்கியமற்ற தோற்றத்தைப் பெறும். முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.
முடி கொட்ட காரணங்கள்
- ஹார்மோன் சமநிலையின்மை
- ஊட்டச்சத்துக் குறைபாடு
- அதிக அளவு மாசு
- பரம்பரை பிரச்சனை
- மன அழுத்தம்
- தூக்கமின்மை
- தண்ணீர்
கடுக்காய், நெல்லிக்காய் பொடி
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம்
தலைமுடி உதிர்வை தடுக்க ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொண்டு, அந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, முக்கால் மணி நேரம் ஊற வைத்த பின்பு தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்றவற்றை தடுக்க முடியும்.
வழுக்கை மறைய
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய், முடிக்கு இயற்கை முறையிலான கண்டிஷ்னர் என்றே சொல்லலாம். இதில் கொழுப்பு அமிலமும் இருப்பதால் தலையில் சீராகத் தேய்த்து , முடியின் நுனியையும் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கலாம்.
தயிர்
கால்சியம் மற்றும் புரோட்டின் சத்துகள் மட்டுமல்லாது இதர ஊட்டச்சத்துகளும் தயிரில் நிறைந்துள்ளன. எனவே தயிரை அப்படியேவும் அல்லது அதோடு முட்டை வெள்ளை பகுதி சேர்த்துத் தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எண்ணெய் மசாஜ்
எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி தலைமுடியை நன்கு அதிகரிக்க செய்கிறது இதை தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யலாம். மசாஜ்ஜை ஒரு மணி நேரம் நன்றாக தலையில் ஊறவிட்டு பின்னர் காலையில் நீரை கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
நட்ஸ்கள்
பாதாம், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும் முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.